இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20,038 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,138 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,038 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,36,076 லிருந்து 1,39,073 ஆக உயர்ந்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,604 பேர் ஆக உள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 16,994 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 43045350 ஆக பதிவாகியுள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,99,47,34,994 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,92,969 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.