கொரோனா 2-ம் அலை – மகாராஷ்டிராவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 68 காவலர்கள் உயிரிழப்பு!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 68 காவல்துறை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மருத்துவமனை நிர்வாகமும் திணறி வரும், சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் என முன்கள பணியாளர்களாக சேவை செய்யக்கூடியவர்களுக்கும் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் காவல்துறையை சேர்ந்த 68 வீரர்கள உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகராஷ்டிரா ஏடிஜி சஞ்சீவ் அவர்கள், தடுப்பூசி போடுவது கொரோனா தொற்றிலிருந்த்து மக்களை பாதுகாக்கவும், கொரோனா பாதிப்பை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதாகவும் எனவே தங்கள் காவல் துறை வீரர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.