ஹரியானாவில் பிரபல ஹோட்டல்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா!

Default Image

ஹரியானாவில் உள்ள பிரபல உணவகங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 4 உணவகங்கள் சீல் வைப்பு.

ஹரியானாவில் முர்தால் எனும் சாலையோர உணவகங்களில் பணி செய்யும், ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டபோது  60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரானா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹரியானாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உள்ள ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.இதனடிப்படையில் ஏற்கனவே நான்கு சாலையோர உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது மேலும் சில உணவகங்களில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பொழுது மேலும் நான்கு உணவகங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அந்த உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் பல உணவகங்களில் இருந்து 950 கொரோனா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பு இந்த உணவகங்களுக்கு வந்து உணவருந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஏற்கனவே நோட்டுகளில் எழுதப்பட்டுள்ளதால் அவர்களை விரைந்து கண்டறியும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அங்குள்ளவர்கள் மேலும் பலருடன் தொடர்பு கொள்ளக் கூடும் என்பதால் பலருக்கும் பரவி விடக்கூடாது என வாடிக்கையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்