இந்தியாவில் 93 லட்சமாக அதிகரித்த கொரோனா – நாளுக்கு நாள் குறையும் புதிய பாதிப்புகள்!
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்தாலும், புதிதாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து கொண்டே தான் செல்கிறது.
உலகளவில் புதிய பாதிப்புகளில் முதலிடத்தில் இருந்த இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 93,09,871 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,35,752 பேர் உயிரிழந்துள்ளனர், 8,717,709 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது சதவீதத்தினர் குணமடைந்து தான் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 43,174 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,56,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் பல ஆராய்ச்சிக்கூடங்களில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், நாம் விழிப்புடன் இருப்பதே சிறந்தது.