டெல்லி, மும்பையில் அதிகரிக்கும் கொரோனா : இந்தியாவில் நான்காம் அலை பரவ தொடங்குகிறதா..!
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதன் தாக்கத்தை சற்றே குறைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதாக மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அதற்குள் மீண்டும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் தலை விரித்து ஆட தொடங்கியது.
குறிப்பாக டெல்லி, மும்பை, நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் மாறுபட்ட புதிய வகையான ஓமைக்ரான் வகை அதிக அளவில் மக்கள் மத்தியில் கண்டறியப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவில்கொரோனாவின் நான்காம் அலை உருவாகப் போகிறதோ என மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது.