எச்சரிக்கை…மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 16,764 பேர் பாதிப்பு;220 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 220 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,38,804 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 3,600 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,48,38,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 220 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,81,080 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,585 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,66,363 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 91,361 ஆக உள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,44,54,16,714 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 66,65,290 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது.அதில் 374 பேர் குணமடைந்துள்ளனர்.
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
???????????????????? ????????????????????https://t.co/K6pcds2cbU pic.twitter.com/jKZoCZH7eo
— Ministry of Health (@MoHFW_INDIA) December 31, 2021