கார்பன் வெளியேற்றத்தை 8 சதவிகிதம் குறைந்துள்ள கொரோனா – சுற்றுசூழல் துறை அதிகாரி!
இந்த ஆண்டு கார்பன் வெளியேற்றத்தை கொரோனா ஊரடங்கு 8 சதவீதம் அளவுக்குக் குறைத்து இருக்கலாம் என சுற்றுச்சூழல் துறை அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிந்தைய வணிக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இணை செயலாளர் சுஜித்குமார் வாஜ்பாய் அவர்கள் பேசும்பொழுது, கொரோனா மிகப்பெரிய சவால்களை அளித்துள்ளதாகவும், பொருளாதாரத்தை தொடங்குவதற்கும் புதிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் அன்றாட வாழ்விலும் சுற்றியுள்ள இயற்கை மற்றும் மற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருவதை நாம் உணர வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கார்பன் வெளியேற்றத்தை நடப்பாண்டில் 8 சதவீதம் வரை குறைக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. பல காரணங்களால் நாம் உயிரினங்களை இழந்து வருகிறோ,ம் பல அழிந்து விட்டது இது சுற்றுச் சூழல் அமைப்பை சீர்குலைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.