ஒரே நாளில் இந்தியாவில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,721 ஐ கடந்து கொரோனா பாதிப்பு சென்று கொண்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்து 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந் நிலையில் இந்தியாவில் இதுவரை 649,889 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 18,669 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,721 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 444 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை 394,319 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 236,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்புகள் அதிகமாகி இருப்பினும் உயிரிழப்புகள் உச்சம் அடையவில்லை, இன்னும் நாம் விழிப்புடன் இருந்தால் கொரோனாவை விரட்டி