கேரளாவில் கொரோனா பாதிப்பு 519 ஆக உயர்வு.!
கேரளாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா கண்டறியப்பட்ட 7 பேரில் 6 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் மீதமுள்ள ஒருவர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் கூறியுள்ளார். இதனால் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் இதுவரை 519 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் இதுவரை 37,858 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 37,098 பேருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. தற்போது கண்காணிப்பில் 27,986 பேர் இருக்கின்றார்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
May 11 #COVID19 Update
7 new cases reported.
6 are imports & one contact.????27,986 under observation
???? 37,858 tested; 37,098 are -ve
???? 3,842 covered in sentinel surveillance; 3,791 are -ve.Wash hands???????? | Wear masks ???? | Social Distancing ↔️ pic.twitter.com/RVwjg22Y4P
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 11, 2020