கேரளா, ஒடிசாவில் கொரோனா பாதிப்பு குறைவு.! 59 மாவட்டங்களில் தொற்று இல்லை .!
கடந்த 14 நாள்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில இடங்களில் அது குறைந்து வருகிறது.அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதாவது, கேரளா, ஒடிசாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் விகிதம் 14.75% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கடந்த 14 நாள்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளது.