இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை எட்டியுள்ளது – பிடிஐ
இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 3,08,507 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8893 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக, வல்லுநர்கள் கூறியதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர் இந்தியாவில் சமூக பரவல் இல்லை என கூறியதையடுத்து, ஐ.சி.எம்.ஆரின் கணக்கெடுப்பு யதார்த்த நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.