மதத்தை மிஞ்சும் மனிதநேயம்..!கொரோனா தொற்றால் இறந்த இந்து மூதாட்டி;அடக்கம் செய்த இஸ்லாமிய நபர்..!
உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 70 வயது இந்து மூதாட்டியின் உடலை எடுத்து இஸ்லாமியர் நபர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆதரவற்றவர்கள் தங்குமிடம் ஒன்றில் வசிக்கும் 70 வயதான சுனிதா தேவி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி அவசரநிலைக்கு வார்டுக்கு அழைத்து வரப்பட்டார்.பரிசோதனை செய்ததில் சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில்,தீவிர சிகிச்சை பெற்று வந்த சுனிதா சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் ஏப்ரல் 29 அன்று இறந்தார்.
இதனையடுத்து,கொரோனா வைரஸ் காரணமாக இறந்ததைத் தொடர்ந்து,உயிர் இழந்து ஆறு நாட்கள் ஆகியும் மூதாட்டியின் உடலை கேட்டு யாருமே முன்வராத காரணத்தினால் உள்ளூர் பத்திரிகையாளரான மெராஜுதீன் கான் மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பீரு உதவியுடன் மூதாட்டிக்கு இறுதிசடங்குகளை மெராஜுதீன் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்ததன் காரணமாக யாருமே அடக்கம் செய்யாமல் இருந்த ஒரு இந்து மூதாட்டியின் உடலை இஸ்லாமியர் நபர் ஒருவர் எடுத்து இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.