‘கொரோனா பாசிடிவ்’ என வந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் நோய் தொற்றால் மட்டுமல்ல சிலர் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தற்கொலைக்கு நேராகவும் சிலர் செல்கின்றனர். அந்தவகையில் ஒடிசாவில் நடுத்தர வயது பெண் ஒருவர், தன் கணவருடன் நாயக்கர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அவரது கணவருக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வந்தது. ஆனால் அவரது மகன் ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மகனுக்கு தொற்று உறுதியான பின் கணவன் மனைவி இருவரும் சுகாதார மையத்தில் சோதனைக்காக தங்களது மாதிரிகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தது. ஆனால் அப்பெண்ணின் பெண்ணிற்கு கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது என போலீசார் உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததிலிருந்து மன அழுத்தத்தில் இருந்த தம்பதியினர், மனைவிக்கு தொற்று நேர்மறையானதை தொடர்ந்து மேலும் சோர்வடைந்த நிலையில், இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…