உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இன்று ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில் லக்னோவில் அதிகபட்சமாக 196 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டாவது மிக அதிகமான கொரோனா தொற்று காசியாபாத்தில் 149 ஆகவும், புத்த நகர் மாவட்டத்தில் 115 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,627 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இறப்புகளின் எண்ணிக்கை 827 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 இறப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தற்போது உத்தரபிரதேசத்தில் 9,514 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் காசியாபாத்தில் அதிகபட்சமாக 1,390 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன்பின்னர் நொய்டாவில் 1,121 பேர், லக்னோவில் 718 பேர் மற்றும் கான்பூரில் 412 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்பு முகக்கவசம் அணியாததற்காக அபராதம் ரூ .100 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிர்த்துள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…