உத்தரபிரதேசத்தில் புதிய உச்சம்..ஒரே நாளில் 1,346 பேருக்கு கொரோனா உறுதி.!

Default Image

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இன்று ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் லக்னோவில் அதிகபட்சமாக 196 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டாவது மிக அதிகமான கொரோனா தொற்று காசியாபாத்தில் 149 ஆகவும், புத்த நகர் மாவட்டத்தில் 115 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,627 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இறப்புகளின் எண்ணிக்கை 827 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 இறப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தற்போது உத்தரபிரதேசத்தில் 9,514 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் காசியாபாத்தில் அதிகபட்சமாக 1,390 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன்பின்னர் நொய்டாவில் 1,121 பேர், லக்னோவில் 718 பேர் மற்றும் கான்பூரில் 412 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்பு முகக்கவசம் அணியாததற்காக அபராதம்  ரூ .100 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிர்த்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்