கேரளாவில் புதிதாக 2 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்
கேரளாவில் வெளிநாடு சென்று வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதுவும், அபுதாபி மற்றும் துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதனால், மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கேரளாவில் இதுவரை 505 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் இதுவரை 36,648 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 36,002 பேருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. தற்போது கண்காணிப்பில் 23,930 பேர் இருக்கின்றார்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#COVID19 Update | May 9
Two new cases reported in the State. These are import cases & have arrived here on May 7th.
One patient has recovered.
????23,930 are under observation
???? 36,648 samples tested; 36,002 -ve
???? 3,475 samples covered in sentinel surveillance; 3,231 are -ve. pic.twitter.com/0Zbuhsx7kn— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 9, 2020