300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்தவர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Default Image

ஹரியானாவில் 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த பிரவீன் குமார் என்பவர் கொரோனாவால் உயிரிழப்பு.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட முன்வராத நிலையில், தன்னார்வலர்களும், காவலர்களும் தாமாகவே முன்வந்து மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்து வைக்கின்றனர்.

அந்த வகையில், ஹரியானா மாநிலம் ஹிசார் நகராட்சியில் கொரோனா தொற்றால்  இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வந்த நகராட்சி ஊழியர் பிரவீன் குமார் (43) அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரவீன்குமார்  நகராட்சிக்குட்பட்ட சஃபாய் கரம்ச்சாரி ஒன்றியத்தின் தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து, ரிஷியில் உள்ள மயானத்தில் பிரவீன் குமாரை உடலுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகராட்சி ஊழியர்கள் இறுதி சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்