இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,946 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 62,748 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,27,911 பேர் ஆக பதிவாகியுள்ளது.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,45,680 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,12,52,83,259 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 12,90,443 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.