உத்திரபிரதேசத்தில், மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் வெளிமாநிலங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கும்பமேளா நிகழ்வை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 38 பேர், உத்திரப்பிரதேச மாநிலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 20 பேர் திடீரென காணாமல் போயுள்ளதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காணாமல் போனவர்கள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்று நோய் பரவும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போனவர்கள், விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகள் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…