கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் பலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள், செல்போன்கள் மூலமாக குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பேச அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், நோயாளிகள் குடும்பத்தினரை நேரில் பார்க்க முடியாமல், குடும்பத்தை விட்டு பிரிந்தது போன்ற உணர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, கொரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கும்படி மாநில, யூனியன் பிரதேச அரசுளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசின் சுகாதாரப் பணிகள் இயக்குநர் ராஜிவ் கார்க் அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசுவதால் ஏற்படும் சமூக பிணைப்பினால் நோயாளிகள் அமைதி அடைவார்கள். எனவே, தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், தங்களின் ஸ்மார்ட் போன், டேப்லட் உதவியுடன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேச அனுமதி அளியுங்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க…
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…