கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி! – மத்திய அரசு

Default Image

கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் பலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள், செல்போன்கள் மூலமாக குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பேச அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், நோயாளிகள் குடும்பத்தினரை நேரில் பார்க்க முடியாமல், குடும்பத்தை விட்டு பிரிந்தது போன்ற உணர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, கொரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கும்படி மாநில, யூனியன் பிரதேச அரசுளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசின் சுகாதாரப் பணிகள் இயக்குநர் ராஜிவ் கார்க் அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசுவதால் ஏற்படும் சமூக பிணைப்பினால் நோயாளிகள் அமைதி அடைவார்கள்.  எனவே, தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், தங்களின் ஸ்மார்ட் போன், டேப்லட் உதவியுடன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேச அனுமதி அளியுங்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்