உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள ஒரு எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் தான் பான் மசாலா சாப்பிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாமல் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து தப்பினார்.
பின்னர், பான் கடைக்கு சென்று பான் மசாலா பாக்கெட்டுகளை வாங்கி தனது சட்டைப் பையில் நிரப்பி வைத்துக்கொண்டு, அவர் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், தனது நண்பரிடம் தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறாமல் அவர்களுடன் நேரத்தை செலவு செய்துள்ளார்.
இதையடுத்து, தப்பிய அந்த நபரை தேடிவந்த அதிகாரிகள் அவரின் நண்பரின் குடும்பத்தினரை அழைத்து, இவர் கொரோனா நோயாளி என்று அவர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனா நோயாளி தனது நண்பரின் வீட்டில் இருந்து அதிகாரிகள் அவரைப் பிடித்து தனிமை வார்டுக்கு அழைத்துச் சென்றனர்.
கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.என் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓடிய கொரோனா நோயாளியின் நண்பரின் குடும்பமும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…