ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே நிர்வாணமாக படுத்திருக்கும் கொரோனா நோயாளி…!

Published by
லீனா

ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே நிர்வாணமாக படுத்திருக்கும் கொரோனா நோயாளி. 

பாரிபாடா நகரமான மயூர்பஞ்சில் வசிக்கும் பிபுதுத்தா டாஷ் என்பவர், மே 22 அன்று பாரிபடாவில் உள்ள  மருத்துவமனையில் அவரது உறவினரை அனுமதித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பாரிபடா நகரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாங்கிசோலில் உள்ள மற்றொரு கோவிட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மே 23 அன்று நண்பகலில், எனது உறவினரின் மரணம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது. இதுகுறித்து டாஷ் என்பவர் கூறுகையில், ‘வீடியோவில் எனது உறவினர் படுக்கையில் உட்கார்ந்து இருப்பதை கண்டேன். அதில் போர்வை மற்றும் தலையணை இல்லை. அவர் ஒரு துண்டு மட்டும் அணிந்து இருந்தார். அவர்களில் சிலர் கழிப்பறைக்கு முன்னால்  தூங்குகின்றனர். வார்டில் சில ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன.

ஆனால் அவற்றை இயக்க அங்கு யாரும் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் பெரும் தொகையை செலவிடுகிறது. ஆனால் எல்லா பணமும் எங்கே போகிறது..? யாருக்கு…?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ பிரகாஷ் சேரன் இதுகுறித்து கூறுகையில், ஆக்சிஜன் ஆதரவு இல்லாத நிலையில் பல நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் என்ன தேவை என்பதை மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை. செவிலியர்கள் தொற்றுநோய்க்கு பயந்து அவர்களுடன் நெருங்கி வருவதில்லை. நிலைமை என்னவென்றால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு கூட கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் காரணமாக தெங்கனல் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் அவலங்கள் தொடர்பாக, ஜூன் 30 ம் தேதி ஒடிசா சுகாதார செயலாளருக்கு ஆஜராகுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்”! தோல்விக்கு பின் திடீரென மக்கள் முன் பேசிய ஜோ பைடன்!

“அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்”! தோல்விக்கு பின் திடீரென மக்கள் முன் பேசிய ஜோ பைடன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…

5 mins ago

SA vs IND : இந்தியா – தென்னாபிரிக்கா இடையே இன்று தொடங்கும் டி20 தொடர்! எந்த சேனலில் பார்க்கலாம்?

டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…

2 hours ago

இந்தியா – கனடா உறவில் மேலும் விரிசல் ! 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்!

ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…

2 hours ago

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!

நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…

12 hours ago

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு… 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…

13 hours ago