மத்திய பிரதேச மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றுக்கொண்ட திருடன்!
மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கொண்ட ஒரு குற்றவாளி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 28 வயதுடைய நபர் கொரோனா தொற்று காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தாமோ எனும் மாவட்டத்தில் ஏடிஎம் களில் இருந்து 46 லட்சத்து கொள்ளையடித்த ஒரு கும்பலின் தலைவனான தேவேந்திர பட்டேல் என்பவர் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளின் இடைப்பட்ட இரவில் அங்கு உள்ள மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்த் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்ட பின்பு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெரும் குற்றவாளிகளுக்காக சிறை ஊழியர்கள் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் மற்றும் சிறை அதிகாரியின் கண்களுக்கு தப்பித்து இவர் ஓடியுள்ளார். இவரை தேடும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது.