ஒரே நாளில் இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு தற்பொழுது இந்தியாவில் தான் தலைவிரித்து ஆடுகிறது என்றே செல்லலாம். இதுவரை இந்தியாவில் 4,202,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 71,687 பேர் உயிரிழந்துள்ளனர், 3,247,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 91,723 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1008 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 883,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.