இந்தியாவில் 84 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – குறைகிறதா? அதிகரிக்கிறதா?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 84 லட்சத்தை கடந்திருந்தாலும், நாளுக்கு நாள் இதன் தாக்கம் குறைந்துகொண்டே தான் செல்கிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொடரால் இதுவரை இந்தியாவில் 84,11,034 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவர்களில் 1,25,029 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 7,764,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒரு பகுதியினரே உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 47,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 675 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்த தொற்று தற்பொழுது நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் வருகிறது. தற்பொழுது மருத்துவமனைகளில் 521,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.