வரும் நாட்களில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகலாம்-சுகாதாரத்துறை அமைச்சர்..!
வரும் நாட்களில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகலாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டப்பேரவையில் பேசிய அவர், கேரளாவில் அதிக அளவு டெல்டா வகை கொரோனாவால் 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது நாட்டில் மூன்றாம் அலை தொடங்கவிருக்கிறது. இருந்தபோதிலும் கேரளாவில் இரண்டாவது அலை இன்னும் முடியாமல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் கட்டுப்பாடுகள் கேரளாவில் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகுதான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து அரசு யோசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இப்போது மாநிலத்தில் தளர்வுகளை அறிவித்தால் அதற்கு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் தற்போது உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் படி கேரள மாநிலத்தில் கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.