இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 8,135 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், 72,339 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மாநில தலைமைச் செயலாளர் மாநிலம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலத் தலைமைச்செயலாளர் விஸ்வாஸ் மேத்தா பிறப்பித்த உத்தரவில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிகமாகக் கூடுவது, கூட்டமாகச் சேர்வது போன்றவை இன்னும் பரவலை வேகப்படுத்தும். எனவே, 5 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 3-ம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சூழலை ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 144 தடை உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள திருமணங்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் தேவைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…