விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா – சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அவசர உத்தரவு!
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் தற்பொழுது கொரோனா பரவி வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தற்போது அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மனிதர்களுக்கே ஆக்சிஜன் இல்லாமல் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மாநில அரசுகள் திணறி வரும் சூழ்நிலையில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் வைரஸ் காரணமாக ஆசிய சிங்கங்கள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கான தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் விலங்குகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அனைத்து மாநிலங்களும் மூடுமாறு ஆலோசனை வெளியிட்டுள்ளது. மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா தற்பொழுது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி விலங்குகளையும் பாதித்து வருவதால் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் மூடுவது பாதுகாப்பான ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.