இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வந்தது.
பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மாவை தானமாகப் பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படுவதாகும். இந்நிலையில் இது தொடர்பாக, இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை எந்த பங்கும் அளிக்க வில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என்று மத்திய அரசுக்கு மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…