இப்படியும் இருப்பார்களா?…மருமகளை கட்டிப்பிடித்த கொரோனா மாமியார்..!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் மருமகளை ஓடிவந்து மாமியார் கட்டிபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தால் அல்ல, தான் மட்டும் தனிமையில் அவதிப்படணுமா? என்ற எண்ணத்தில் கொரோனா பாதித்த மாமியார் செய்த செயல் இது.
தெலங்கானா மாநிலத்தில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 20. கொரோனாவின் தாக்கத்தால் இவரின் சகோதரி இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தொற்று குறித்து விசாரிக்கும் பொழுது, அப்பெண் கூறிய பதிலை கண்டு வியந்து போனார்.
அந்த பெண் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஒடிசாவில் டிராக்டர் ஓட்டுகிறார். என் மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணத்தால் அவரை வீட்டிலேயே தனிமை படுத்தி சிகிச்சை அளித்து வந்தோம். மாமியாருக்கு வேண்டிய உணவை தனியாக ஒரு தட்டில் வழங்கினேன். குழந்தைகளையும் பாட்டியிடம் அனுப்பாமல் கவனித்துக்கொண்டேன். இதனால் கோபமடைந்த என் அத்தை அடிக்கடி என்னை திட்டி சண்டை போட்டுகொண்டு இருந்தார். இப்படி ஒரு நாள் ஆத்திரத்தில் அவர், நான் இங்க கஷ்டத்துல செத்துட்டு இருக்கன். நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கீங்களா? என்று திட்டினார். அதன் பின்னர் கோவத்தில் ஓடிவந்து என்னை வேகமாக கட்டிப்பிடித்தார். இதனால் தான் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் என்னை இப்பொழுது வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். தற்பொழுது என்னை சகோதரியே கவனித்து கொண்டு இருக்கிறாள் என்று கூறியுள்ளார் அந்த பெண்மணி.
இதை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் மருத்துவர். மாமியாரின் இந்த செயலால் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.