லூதியானாவில் இருக்கும் இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமெடுத்து பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் முடிவெடுத்து வருகின்றன.
இதனையடுத்து லூதியானாவில் கடந்த ஜூலை 26 முதல் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு பள்ளிகள் தொடங்கப்பட்டன. தற்போது லூதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பள்ளிகளில் உள்ள மற்ற குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் கல்வித்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…