மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பாகுமா ?

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ?
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது.
இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிக்க அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நரேந்தி மோடி தலைமையில் இன்று நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊடங்கு நீட்டிப்பு குறித்து மே 3ம் தேதி மேல் முடிவெடுக்கப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.