#Breaking:சற்று ஆறுதல்…மீண்டும் 12 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா;ஆனால் ஒரே நாளில் 25 பேர் பலி!

Default Image

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 15,940 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 11,739 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,89,973 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 91,779-லிருந்து 92,576 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 25 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,24,999 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 10,917 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர் மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,72,398 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,97,08,51,580 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12,72,739 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்