கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதில்லை என்றும் அது ஆய்வு கூடத்தில் உருவானது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கி, சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதனால். கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்’ என்று அழைத்து வந்தார். சீனா செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த உலகமும் தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றன என்றும் கூறி, சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கயிருந்த நிதியை நிறுத்திவைக்கப்படுவதாக எச்சரித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்றும் செயற்கையான முறையில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த கொடிய வைரசால் தற்போது பல நாடுகளை பாதித்துள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்களர்கள் இறங்கியுள்ளார்கள் என்றும் அதைத் தடுக்கும் மருந்து தற்போது ஏதும் இல்லை என கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து முழுமையாக வெளியே வர முடியும். இதனால் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஆனால் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். எனவே, நாம் கொரோனா வைரஸுடன் வாழும் நிலையை பழகிக்கொள்ள வேண்டும். மேலும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…