உலகம் முழுவதும் தனது கொரத்தொற்றால் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொரத்தை காட்ட துவங்கி உள்ளது.அதன்படி இந்தியாவில் மட்டும் இந்த வைரஸிற்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.11 பேர் பலியாகி உள்ளனர்.இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் இன்று நள்ளிரவில் உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் பாதிப்பு மற்றும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் தலா 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அதில் ஒருவர் இறந்துள்ளார். அங்கு கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய அம்மாநில அரசு கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கும்,அந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையை கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக உடனடியாக மாற்றி முதல்வர் மம்தா உத்தவிட்டுள்ளார்.இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவிக்கையில் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றுகிறோம். இதனால் அந்த மருத்துவமனைக்கு புதிதாக நோயாளிகள் யாரையும் சேர்க்கவில்லை. ஏற்கனவே சிகிச்சை பெற்றுவருகின்ற நோயாளிகளை தற்போது வீட்டுக்கு அனுப்பி வருகிறோம். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் கர்ப்பணிப் பெண்களை தக்க பாதுக்காப்போடு மாற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.கொரோனா தடுப்பிற்காக மாற்றியமைக்கப்பட்டைம் இந்த மருத்துவமனையில் 2,200 படுக்கைகள் உள்ளன. இதனை முழுமையாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், சுய தனிமைக்காக வருவோருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும்வைரஸைத் தடுக்கும் எங்களின் முயற்சியில் இது முக்கியமான ஒன்றாகும் என்று இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…