144 தடையை மீறிய ஆளுங்கட்சி எம்எல்ஏ..பாய்ந்தது கிரிமீனல் வழக்கு-போலீசார் அதிரடி

“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் மீது 144 தடை உத்தரவை மீறியதாக அவர் மீது கிரிமீனல் வழக்கு பதியப்பட்டுள்ளது”.
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் நெல்லித்தோப்பு சவரிபடையாட்சி வீதியில் வசித்து வருபவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார். கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் இருப்பதால் அவர் அப்பகுதி மக்களுக்கு தனது வீட்டு முன்பு காய்கறி விநியோகம் செய்து உள்ளார்.இதனால் அவர் வீட்டு முன்பு சற்று நேரத்தில் கூட்டம் கூடியுள்ளது. இத்தகவல் அறிந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று கூடியிருந்த மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் 144 தடை அமலில் இருக்கும் போது மக்கள் கூட்டத்தை கூட்டியதால் ஜான்குமார் எம்எல்ஏ மீது இந்திய தண்டனை சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் கிரிமினல் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை மீறுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி என கூறி உள்ளார். 200-க்கும் மேற்பட்டோரை வீட்டு முன் கூட்டி பொருட்களை விநியோகம் செய்தது தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது.
சட்டத்தை பின்பற்றாமல் அதை மீறிய ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது கிரிமீனல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தி, சட்ட விதிகளை கடைபிடிப்பது அந்த சட்டத்தை உருவாக்குபவர்களின் பெரிய பொறுப்பு என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.