ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர். அதில், ஈரானில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் மூலம் சி -17 குளோப்மாஸ்டர் III என்ற போக்குவரத்து விமானம் தயாராகிறது. இந்த விமானம் இன்று புறப்படுவதாக உள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குளோப்மாஸ்டர் விமானம், நேற்று இரவு 8.30 மணிக்கு காசியாபாத்திலிருந்து கிளம்பி சென்றது. இன்று அதிகாலை 2 மணிக்கு தெஹ்ரான் செல்லும் விமானம், அங்கிருக்கும் இந்திய பயணிகளை அழைத்துக் கொண்டு, 4.30 மணிக்கு இந்தியா கிளம்பும். காலை 9.30 மணிக்கு விமானம் காசியாபாத் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிக்கியுள்ளோரின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…