இன்று வரை 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல்…

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசும் அந்தந்த ,மாநில அரசுகளும் எடுத்து வருகிறது. இந்நிலையில்,நாடு முழுவதும் இந்த கொடிய கொரோனா மாதிரிகளை ஆர்-டி பி.சி.ஆர் முறையில் சோதிக்கும் அரசு மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்களின் எண்ணிக்கை 363 என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 42,533 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1373 பேர் இந்த தொற்றின் காரணமாக மரணமடைந்திருப்பதாகவும், 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த தொற்றின் பிடியிலிருந்து பூரண குணமடைந்திருப்பதாகவும், மேலும், இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 11,07,233 பேர் வரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.