கர்நாடகாவில் தனது ஆதிக்கத்தை காட்டும் கொரோனா..ஒரே 1,267 பேருக்கு கொரோனா.!
கர்நாடகா மாநிலத்தில் என்றும் இல்லாத அளவாக நேற்று மட்டும் 1,267 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,190 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 1,267 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,190 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 220 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 7507 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் 10, லட்சத்தை கடந்தது கொரோனா, இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,09,713 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.