கொரோனா சமூக தொற்றாக இல்லை – மத்திய சுகாதார துறை அமைச்சகம்
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சகம், கொரோனா வைரஸ் உள்வட்டாரப் பரிமாற்றமாகவே உள்ளது. சமூக தொற்றாக மாறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா சமூக தொற்றாக பரவினால், குறிப்பிட்ட நோயாளி யார் மூலமாக தொற்றுக்கு ஆளானார் என்பதையே கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.