நாடு முழுவதும் எந்தெந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்.!

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,318 பேர் பாதிக்கப்பட்டு, 400 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,388 ஆக உள்ளது.
இதையடுத்து, குஜராத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,774 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 181 ஆகவும் உள்ளது. டெல்லியில் பாதிப்பு 3,314, உயிரிழப்பு 54, மத்திய பிரதேசத்தில் 2,561 பேர் பாதிக்கப்பட்டு, 119 பேர் பலியாகியுள்ளார்கள். ராஜஸ்தானில் 2,364 பேர் பாதிக்கப்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025