கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 125 ஆக உயர்வு.!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2069ஆக இருந்துவந்த நிலையில் இன்று 2301-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 157 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று காலை கொரோனா பாதிப்பு வரை 124 இருந்தது.
ஆனால் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆகவும் , 11 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு திரும்பி உள்ளதாக கர்நாடகா மாநில தரப்பில் கூறப்பட்டுள்ளது.