இந்தியாவில் நேற்று மட்டும் 53,476 பேருக்கு கொரோனா தொற்று…! 251 பேர் உயிரிழப்பு…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,17,87,534 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,60,692-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில், 26,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 5,31,45,709 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.