#BREAKING: கர்நாடக சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று.!
கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரசால் தற்போது அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், இன்று காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. முதலமைச்சர்களின் தலைமையில், எனது துறை உட்பட அரசின் அனைத்து துறைகளும் கொரோனாவிற்கு எதிராக கடுமையாக உழைத்து வருகின்றன.
“கொரோனா வைரஸ் தோன்றிய காலத்திலிருந்து, 30 மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது,” என பதிவிட்டுள்ளார்.
3/3
ಆದಷ್ಟೂ ಬೇಗ ಗುಣಮುಖನಾಗಿ ಸಂಕಷ್ಟ ಸಮಯದಲ್ಲಿ ಇನ್ನಷ್ಟು ಜನಸೇವೆ ಮಾಡಲು ಶಕ್ತಿ ಕೊಡುವಂತೆ ಭಗವಂತನಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತೇನೆ.ಇತ್ತೀಚಿಗೆ ನನ್ನ ಸಂಪರ್ಕದಲ್ಲಿದ್ದ ಎಲ್ಲರೂ ಮುನ್ನೆಚ್ಚರಿಕೆ ಕ್ರಮ ವಹಿಸಲು ಕೋರುತ್ತೇನೆ.
— B Sriramulu (@sriramulubjp) August 9, 2020