மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிற்கு ஜூலை 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 11 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஆகஸ்ட் 5-ம் தேதி வீடு திரும்பினார்.
அதனையடுத்து அவரது அமைச்சரவை குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்போது மருத்துவ கல்வி அமைச்சராக விஸ்வாஸ் சாரங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான முதல்கட்ட பரிசோதனையில் இவருக்கு நெகட்டிவ் வந்ததை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
அதனையடுத்து அவரது இரண்டாவது கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே தனக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் கொரோனாவிற்கான பரிசோதனையை செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…