போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி.! அதிகாரிகள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 23வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகளை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஹைட் நகரில் 26 வயதுடைய நபர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சனத்நகர் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த நபருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலில் செர்லப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உடனடியாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு மாற்றப்பட்டார். மேலும் அந்த நபரை விசாரித்த அதிகாரிகளையும், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறை ஊழியர்களையும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.