இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை மோசமாக தாக்கி வருகிறது. இது கொரோனா முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,40,46,809 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,44,776 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், இதுவரை 2,00,79,599 பேர் வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் தற்போது 37,04,893 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் 17,92,98,584 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
????Total #COVID19 Cases in India (as on May 14, 2021)
▶️83.50% Cured/Discharged/Migrated (2,00,79,599)
▶️15.41% Active cases (37,04,893)
▶️1.09% Deaths (2,62,317)Total COVID-19 confirmed cases = Cured/Discharged/Migrated+Active cases+Deaths#StaySafe pic.twitter.com/cbCoWpWvkp
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 14, 2021