மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் கடந்த 3-4 நாட்களாக 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் கடந்த 3-4 நாட்களாக 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு RT-PCR சோதனையை நாங்கள் நடத்தி வருகிறோம் என்று போசலே மேலும் கூறினார். மஹாராஷ்டிராவில் ஓமைக்ரான் பரவி வரும் மத்தியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,410 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,54,755 ஆக உள்ளது என்றும் கொரோனா இறப்பு எண்ணிக்கை 141,404 ஆக உள்ளது என மாநில சுகாதாரத் துறை நேற்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 115 பேர் குணமடைந்து விட்டதாகவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…