ஓமைக்ரான் மத்தியில் 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Default Image

மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் கடந்த 3-4 நாட்களாக 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் கடந்த 3-4 நாட்களாக 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு RT-PCR சோதனையை நாங்கள் நடத்தி வருகிறோம் என்று போசலே மேலும் கூறினார். மஹாராஷ்டிராவில் ஓமைக்ரான் பரவி வரும் மத்தியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,410 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,54,755 ஆக உள்ளது என்றும் கொரோனா இறப்பு எண்ணிக்கை 141,404 ஆக உள்ளது என மாநில சுகாதாரத் துறை நேற்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.  நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 115 பேர் குணமடைந்து விட்டதாகவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்